அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சருக்கு பிரதமர் கடும் எச்சரிக்கை:-

321

அவன்ட் கார்ட் சம்பவம் n;தாடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் அலரி மாளிகைக்கு நீதி அமைச்சரை அழைத்து பிரதமர் நீண்ட நேரம் அவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய தரப்பினருடன் அவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பில் வாதப் பிரதிவாதங்களில் சிக்க வேண்டாம் எனவும், அவன்ட் கார்ட் நிறுவனத்தின் சார்பில் பேசுவதனை தவிர்த்துக் கொள்ளுமாறும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
அவன்ட் கார்ட் நிறுவனம் தொடர்பில் அமைச்சரினால் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்கள் அடங்கிய ஆவணக் கோவையொன்றையும் பிரதமர் இந்த கலந்துரையாடலின் போது காண்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவன்ட்கார்ட் சம்பவம் தொடர்பில் எழுந்த சர்ச்சைகளை அடுத்து சட்டம் ஒழுங்கு அமைச்சினை திலக் மாரப்பன துறக்க நேரிட்டதாகவும், அவ்வாறு அமைச்சுப் பதவியை துறந்ததன் பயனை கெடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டு அரசாங்கத்தை மேலும் நெருக்கடியில் ஆழ்த்த வேண்டாம் எனவும் விஜயதாச ராஜபக்ஸவிடம், பிரதமர் கோரியுள்ளார்.
அவன்ட் கார்ட் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதனையும், வாத பிரதிவாதங்களில் ஈடுபடுவதனையும் முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டுமென பிரதமர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SHARE