அவன் கார்ட் நிறுவனம் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு 9100 மில்லியன் ரூபாவினை வழங்க இணக்கம்

318

சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் நிறுவனம், ரக்னா லங்கா நிறுவனத்திற்கு 9100 மில்லியன் ரூபா பணத்தைச் செலுத்த இணக்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பத்து மாதங்களில் இந்தப் பணம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரக்னா லங்கா நிறுவனத்திடமிருந்து, அவன் கார்ட் நிறுவனம் பெற்றுக்கொண்ட சேவைக்காக இவ்வாறு பணம் செலுத்தப்பட உள்ளது.
பாரிய குற்றச்செயல்கள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் பங்கேற்ற ரக்னா லங்கா நிறுவனத்தின் கணக்காளர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
நிறுனம் ஆரம்பிக்கப்பட்டு முதல் இரண்டு ஆண்டுகளின் பின்னர் அரசாங்கத்திற்கு லாபங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், 2009ம் ஆண்டின் பின்னர் நிறுவனத்தினால் லாபமீட்ட முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE