அவன் வருவான், அவனால் மட்டும் தீர்வு கிடைக்கும்- சமுத்திரகனி அதிரடி

191

 

கோலிவுட்டில் ஒரு சிலரே பணத்தை தாண்டி நல்ல கருத்தை பதிய வைக்க படம் எடுப்பவர்கள். அந்த வகையில் தொடர்ந்து கரண்ட் ட்ரெண்டில் நடக்கும் அநீதிகளை படமாக எடுத்து வருபவர் சமுத்திரகனி.

இவர் இயக்கத்தில் மே மாதம் திரைக்கு வரவுள்ள படம் தொண்டன். இப்படத்தில் விக்ராந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘விவசாயிகளை சாமியாக கும்பிட வேண்டும், இதை நான் அப்பா படத்திலேயே கூறியிருந்தேன்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்ட இளைஞர்கள் அதற்காக மட்டும் ஒன்று கூடவில்லை. பல பேரின் அடக்குமுறையின் வெளிப்பாடு அது.

மேலும், இனி எல்லா பிரச்சனைகளுக்கும் அவன் வருவான், அவனால் மட்டுமே இனி அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்’ என கூறியுள்ளார்.

SHARE