திரைப்பட பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கிலிருந்து பிரபல நடிகர், இசையமைப்பாளர், நடிகைகளின் ஆபாசக் காட்சிகள் வெளியாகிபடியே உள்ளன. சக பாடகியான சின்மயி போன்றோர், சுசித்ரா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிவரும் நிலையில், தொலைக்காட்சி சேனல்கள் சிலவற்றுக்கு அளித்த பேட்டியில், தனது டிவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சுசித்ரா தெரிவித்தார்.
அதேநேரம், ஹேக் செய்யப்பட்ட கணக்கினை ஏன் இதுவரை முடக்கவில்லை என்ற கேள்வி தொடர்ந்து நெட்டிசன்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தேதி, நாள் குறித்து, தினமும் ஒரு பிரபலத்தின் அந்தரங்க வீடியோவை வெளியிட உள்ளதாகவும் சுசித்ரா தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்திருப்பது மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதனால் எந்த பிரபலத்தின் போட்டோ அல்லது வீடியோ வருமோ என்ற எதிர்பார்ப்பில் நெட்டிசன்கள் உள்ளனர். இந்நிலையில், சுசித்ராவின் டிவிட்டர் அக்கவுண்ட் பூட்டு போடப்பட்டது. அதாவது ஏற்கனவே அவரை ஃபாலோ செய்வோர் மட்டுமே அவரது டிவிட்டுகளை பார்க்க முடியும். ஆனால் இன்று காலையில் அதை ரிலாக்ஸ் செய்தார். பிறகு மீண்டும் லாக் செய்யப்பட்டது.
இந்த இடைவெளியில் சுசித்ரா வெளியிட்ட டிவிட்டுகள் சில நேரடியாக ஒரு பிரபல நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் மீது பாலியல் புகார் கூறுவதாக இருந்தது. இதுவரை அவர் வெளியிட்ட டிவிட்டுகள் இரு தரப்பு சம்மதத்துடன் நடந்த பாலியல் நடவடிக்கை என கூறப்பட்டிருந்த நிலையில், இந்த ஒரு டிவிட் பலாத்காரம் என நேரடியாக குற்றம்சாட்டியது.
ஒரு பிரபல நடிகர் மற்றும் இசை அமைப்பாளருடன் பார்ட்டியில் பங்கேற்றதாகவும், அப்போது தான் அருந்திய பானத்தில் மருந்து கலக்கப்பட்டு தரப்பட்டதாகவும், பிறகு நடந்த அந்த பயங்கர அனுபவத்தை இங்கு கூற முடியாது என்று சுசித்ரா டிவிட்டர் கணக்கிலிருந்து வெளியான டிவிட்டுகள் சொல்கிறது.
அந்த இருவரும் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் டிவிட்டில் கூறப்பட்டுள்ளது. பலாத்காரம் பெரும் குற்றம் எனும் நிலையில் இந்த டிவிட்டுகள் மீது போலீஸ் விசாரணை நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சுசித்ரா ஒரு ஒல்லி நடிகர் மற்றும் ஒல்லி இசையமைப்பாளர் மீதுதான் இக்குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க தற்போது பாடகி சுசித்ரா தனது ட்விட்டர் கணக்கினை தனியார் நிறுவனம் ஒன்று ஹேக்கிங் செய்துள்ளதாகவும், இதனை நான் தனியார் துப்பரியும் நிறுவனம் மூலம் கண்டறிந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் நிலையில் நான் இல்லை என்றும், கேட்டுக் கொள்வதெல்லாம் ஒரே விடயம் தான் என்னை விட்டுவிடுங்கள்… நான் நடிகர், நடிகைகள் பற்றி எப்போதும் பேசியதில்லை என சுசித்ரா கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது எது உண்மை எது வதந்தி என்ற குழப்பத்தில் காணப்படுகின்றனர் ரசிகர்கள்… யாருக்குத் தெரியும் அவர்களா வாய்திறந்தால் மட்டுமே உண்மை என்னவென்று தெரியும்…