அவர்களை தீர்த்துக் கட்டுவேன்! தந்தையை இழந்த 10 வயது சிறுவனின் சபதம்

275

காஷ்மீரில் உரி நகர தாக்குதலின் போது உயிரிழந்த இராணுவவீரரின் மகன் என் அப்பாவின் கனவை நிறைவேற்றுவேன் என சபதமிட்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் இந்திய இராணுவமுகாம் செயல்பட்டு வருகிறது.

இந்த இராணுவ முகாமுக்குள் கடந்த 18 ஆம் திகதி வெடிபொருட்களுடன் புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினர்.

இதில் இராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 20 இராணுவவீரர்கள் உட்பட 4 தீவிரவாதிகள் இறந்தனர்.

இத்தாக்குதல்களில் இறந்த இராணுவவீரர்களில் ஹெரிவிதார் ரவிபாலும் ஒருவர், இவரின் சொந்த ஊர் சர்வா கிராமம் ஆகும்.

ரவிபாலுக்கு கீதா ராணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இராணுவத்தில் கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ரவிபால் உரி நகர தாக்குதலில் மரணமடைந்தார்.

தந்தை உயிரிழந்ததை அறிந்த அவரின் 10 வயது மகன் விக்னேஷ், உடல் அடக்கத்தின் போது தனது தந்தை தாய் நாட்டிற்காக இறந்துள்ளதாகவும், தன்னிடம் தினமும் பேசும் போது படிப்பில் கவனம் செலுத்த சொல்வார் எனவும் கூறினார்.

மேலும் படித்து முடித்தவுடன் தன்னையும் தன் தம்பியையும் இராணுவ மருத்துவராக ஆக்கவேண்டும் என்பது அவரது கனவு, அவரது கனவை நிறைவேற்றுவேன், இராணுவத்தில் சேர்ந்து தீவிரவாதிகளை தீர்த்துகட்டுவேன் என சபதமிட்டுள்ளார்.

SHARE