அவுஸ்திரேலியாவின் வெற்றியே அவர்களின் ஆக்ரோஷம் தான் – கெளதம் கம்பீர்

241

அவுஸ்திரேலியா பழைய ஆக்ரோஷத்துடன் விளையாடாவிட்டால் மீண்டும் கிரிக்கெட்டில் எழுந்துவர முடியாது, வெற்றியை ருசிக்க முடியாது என சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை அடுத்து அந்த அணியின் செயல் மோசமாக சென்று கொண்டிருக்கின்றது.

இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர், அவுஸ்திரேலியாவின் வெற்றியே அவர்களின் ஆக்ரோஷம் தான். களத்தில் எதிரணி வீரரை கிண்டல் செய்வது, முறைப்பது, வீரரை வீழ்த்த செய்யும் சூழ்ச்சி என அவர்களின் உண்மை குணத்தை மறந்து விட்டனர்.

நானும் களத்தில் ஆக்ரோஷமாகவும், கிண்டல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டவன் தான். எனக்கும் அது நடந்துள்ளது.

ஆனால் அவுஸ்திரேலியாவின் இயல்பான அந்த ஆக்ரோஷ தன்மை இல்லாததால் இந்தியாவிடம் அந்த அணி தோல்வியடைந்தது.

மீண்டும் தங்கள் இயல்பு நிலைக்கு அவர்கள் வரலாம் என கூறியுள்ளார்.

SHARE