அவுஸ்திரேலியாவிலும் ஆதிக்கம் செலுத்துவார் கோஹ்லி – மைக்கேல்

156

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் ஆதிக்கம் செலுத்துவார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.

நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் தடையில் இருப்பதல் அவுஸ்திரேலியா அணி தற்போது தடுமாறி வருகிறது. இந்நிலையில், விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அடுத்ததாக அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை வென்றுள்ள இந்திய அணி, அதே உத்வேகத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வெல்லுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வாகனிடம் கேட்கப்பட்டது. அப்போது, அவுஸ்திரேலியாவில் விராட் கோஹ்லியின் ஆதிக்கம் தொடருமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஆம் என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார்.

SHARE