அவுஸ்திரேலியாவில் இலங்கை பிரஜை ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் மூன்று நேபாள பிரஜைகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக Adelaide Now என்ற ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நேபாள பிரஜைகள் மூவரையும்,விளக்கமறியலில் வைக்குமாறு எலிசபத் நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட குறித்த இலங்கை பிரஜையின் முகம் இரத்தத்துடன் தடாகம் ஒன்றில் அழுத்தியவாறு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு,39 வயதுடைய இலங்கைப் பிரஜை கொலை செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் 44, 34, 48 வயதுடைய நேபாள பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கு பிணை வழங்கப்படமாட்டது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கைப் பிரஜையின் மரணம் தொடர்பில் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கும் முயற்சியில் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.