அவுஸ்திரேலியாவில் குடும்ப பிரச்சினை காரணமாக தமது கணவரை இலங்கை பெண்ணொருவர் கொலை செய்திருந்தார்.
வைத்தியரான மரி லியனகே என்பரே கொலைக் குற்றவாளியென நீதிமன்றினால் அறிவிக்கப்பட்டது.. இந்நிலையில் கணவரின் செயற்பாடு குறித்து அவர் தற்போது விளக்கமளித்திருந்தார்.
தான் நேசித்த கணவரினால் 5 வருடத்திற்கு மேலாக கடும் சித்திரவதைக்கு உட்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தனது கணவனால் கடுமையாக தாக்கப்பட்டு, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளார். தான் நேசித்த ஒருவரிடம் பயத்துடனே அவர் வாழ்ந்து வந்துள்ளார்.
மேற்கு அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த வைத்தியர் கடந்த ஆம் ஆண்டு ஜுன் மாதம் அவர்களது இல்லத்தில் வைத்து கணவரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு காரணமாக குறித்த பெண்ணுக்கு கடந்த வருடம் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
“நான் அன்றைய தினம் என்ன நடந்ததென்பதனை அறியவில்லை. இன்று வரையில் அன்று என்ன நடந்தது என்பது குறித்து நினைவில் இல்லை. எனது கணவர் ஒரு நாள் மாறுவார் என எதிர்பார்த்தேன். அவர் மாறவில்லை.
கொலை இடம்பெற்ற தினத்தன்று என்ன நடந்ததென்பது குறித்து நான் சரியாக அறியவில்லை. நான் சரியான நிலைமைக்கு திரும்புவதற்கு ஒரு மாதம் காலம் கடந்து விட்டது.
இப்படியொரு கொலை நடக்கும் என நான் நம்பவில்லை. எனினும் நடந்துவிட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வருவதற்கு எனக்கு ஒரு மாதம் தேவைப்பட்டது. என்னால் நம்ப முடியவில்லை. டினிஸ் எனது கணவர். நான் அவரை காதலித்தேன். அவர் ஒருநாள் மாறுவார் என எதிர்பார்த்தேன். நான் ஐந்தரை வருடங்களான அவரின் நல்ல பக்கத்தையும் சிறப்பான பக்கத்தை பார்த்துள்ளேன்.
எனினும் நான் அவர் கூறிய அனைத்தையும் கேட்டேன் அவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சித்தேன். என்னால் இன்று வரையில் அன்று என்ன நடந்ததென்பதனை நம்ப முடியவில்லை”… என சமரி தனது கணவர் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதம் அவர்களது இல்லத்தில் வைத்து இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றது. இந்த குற்றச்சாட்டு காரணமாக குறித்த பெண்ணுக்கு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
எனினும் வைத்தியரான சாமரி லியனகே விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரின் நன்னடத்தை காரணமாகவே விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளார்.
இதேவேளை,அவர் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் உடனடியாக நாடு கடத்துமாறு கோரிக்கைககள் முன்வைக்கப்பட்டிருந்தன. எனினும் தன்னை நாடு கடத்த வேண்டாம் என அந்நாட்டு குடிவரவு அமைச்சரிடம் சாமரி லியனகே கோரிக்கை விடுத்திருந்தார்.
ரத்துச் செய்யப்பட்டிருந்த சாமரி லியனகேயின் விசாவை மீள புதுப்பித்து தருவதாக அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், மீளாய்வு மேற்கொண்டு சாமரி லியனகேவுக்கு அவுஸ்திரேலியாவில்
தங்குவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.