அவுஸ்திரேலியாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வளாகத்திற்கு அருகில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர், பனாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது சந்தேகநபரிடம் இருந்து 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கடவுச்சீட்டு என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த பெண் அவுஸ்திரேலியாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி வெவ்வேறு நபர்களிடம் இருந்து 98 லட்சம் ரூபா வரையில் மோசடி செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 24ம் திகதி வரையில், விளக்கமறியலில் வைக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மோசடி சம்பவங்கள் அண்மைக் காலமாக வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், இவ்வாறான நபர்களிடம் மிகவும் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர்.