அவுஸ்திரேலியாவில் வீதி விபத்து – இலங்கை இளைஞன் மரணம்

187

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மெல்போர்ன் நகரத்தில் பணியாற்றிய இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அளுத்கம பகுதியை சேர்ந்த தரிந்து குரே என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது மோட்டார் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையினால் ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது பிரிவை தாங்க முடியாத நண்பர்கள் பேஸ்புக் பக்கத்தில் தங்கள் அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.

SHARE