மகளிர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 376 ஓட்டங்கள் குவித்துள்ளது.
சுருண்ட அவுஸ்திரேலியா
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது.
அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 219 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. தஹ்லியா மெக்ராத் 50 (56) ஓட்டங்களும், மூனே 40 ஓட்டங்களும் எடுத்தனர்.
மிரட்டலாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர்கள் பூஜா வஸ்திரேக்கர் 4 விக்கெட்டுகளும், ஸ்நேஹ் ராணா 3 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
நான்கு வீராங்கனைகள் அரைசதம்
அதனைத் தொடர்ந்து இந்திய மகளிர் அணி களமிறங்கியது. ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா கூட்டணி 90 ஓட்டங்கள் முதல் விக்கெட்டுக்கு குவித்தது.
ஷஃபாலி 40 ஓட்டங்களில் அவுட் ஆக, ஸ்நேஹ் ராணா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஸ்மிரிதி (74), ரிச்சா கோஷ் (52) அரைசதம் விளாசினர்.
ஆனால் கேப்டன் ஹர்மன்பிரீத் (0), யஸ்டிகா சொதப்பிய நிலையில் ஜெமிமா மற்றும் தீப்தி சர்மா அவுஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்தது.
தீப்தி சர்மா 70 நாட்அவுட்
இதன்மூலம் இந்திய அணி 300 ஓட்டங்களை கடந்தது. ஜெமிமா 73 ஓட்டங்கள் எடுத்து கார்ட்னர் பந்துவீச்சில் அவுட் ஆனார். இந்திய அணி 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுக்கு 376 ஓட்டங்கள் குவித்துள்ளது. மற்றும் 157 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தீப்தி சர்மா 70 ஓட்டங்களுடனும், பூஜா 33 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். அவுஸ்திரேலிய தரப்பில் அஷ்லேஹ் கார்ட்னர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.