அவுஸ்திரேலியாவை கலக்கப் போகும் இந்திய வீராங்கனை

223

625-500-560-350-160-300-053-800-748-160-70-12

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தானா அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாட இருக்கிறார். இவரை பிரிஸ்பேன் ஹீட் என்ற அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

முன்னதாக முதல் வீராங்கனையாக ஹர்மன்ப்ரீத் கவுர் பிக் பாஷ் தொடரில் இடம்பிடித்து சாதனைப் படைத்தார். தற்போது 2வது வீராங்கனையாக ஸ்மிரிதி மந்தானா பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாட உள்ளார்.

20 வயதாகும் ஸ்மிரிதி மந்தானா கடந்த சில வருடங்களாக வளர்ந்து வரும் வீராங்கனையாக ஜொலித்து வருகிறார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற டி20 தொடர் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ண தொடரில் முக்கிய பங்காற்றினார். இவரது சிறப்பான செயல்பாட்டை பார்த்து பிரிஸ்பேன் ஹீட் அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து மந்தானா கூறுகையில், பிக் பாஷில் விளையாட இருப்பது சிறப்பானதாக உணர்கிறேன். பிரிஸ்பேன் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்ஷ்டம்.இளம் வயதில் இதுபோன்ற வாய்ப்பு கிடைத்தது நல்ல அனுபவத்தை பெற உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE