அவுஸ்திரேலியா சர்ச்சைக்குரிய புகலிடக் கோரிக்கையாளர் சட்டமொன்றை நிறைவேற்றியுள்ளது.

334
அவுஸ்திரேலியா சர்ச்சைக்குரிய புகலிடக் கோரிக்கையாளர் சட்டமொன்றை நிறைவேற்றியுள்ளது:

அவுஸ்திரேலிய அரசாங்கம் சர்ச்சைக்கரிய புகலிடக் கோரிக்கையாளர் சட்டமொன்றை நிறைவேற்றியுள்ளது.

இந்த சட்டமானது புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை முடக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் ஊடாக பெரும்பான்மையான புகலிடக் கோரிக்கையாளர்களின் புகலிட  கோரிக்கைகள் எல்லையில் வைத்தே நிராகரிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சட்டமானது யுத்தம் மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பளிக்கும் அடிப்படை மனித உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளதாக உரிமைசார் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

புகலிடக் கோரிக்கையாளர் பிரச்சினைகளின் போது அவசரகாலத்தை பிரகடனம் செய்ய புதிய சட்டம் அரசாங்கத்திற்கு அவகாசம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE