மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி யோசிதவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இந்த மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சைகளுக்காக ஒரு மாதத்திற்கு அவுஸ்திரேலியா செல்ல அனுமதி தருமாறு அந்த மனுவில் யோசித குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் இந்த மனுவை தனது சட்டத்தரணி ஊடாக கடந்த 20ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆர் ஹெய்யன்துடுவ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம் பெற்ற மோசடி காரணமாக யோசிதவின் கடவுச் சீட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.