அவுஸ்திரேலியா- நியூசிலாந்து 2-வது டெஸ்ட்: வெற்றி தோல்வியின்றி முடிந்தது

256
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்துள்ளது.அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

முதல் டெஸ்டில் 1-0 என அவுஸ்திரேலியா முன்னிலையில் இருந்தது, இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் கடந்த 13ம் திகதி தொடங்கியது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்படுத்தாட தீர்மானித்த அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுக்களை இழந்து 559 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதனையடுத்து முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த நியூசிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 624 ஓட்டங்களை குவித்தது.

இதையடுத்து 65 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில், தனது 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி ஏழு விக்கெட்டுக்களை இழந்து 385 ஓட்டங்களை எடுத்து டிக்கேளர் செய்தது.

இந்நிலையில் இறுதிநாளான இன்று விளையாடிய நியூசிலாந்து அணி 104 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.

SHARE