அவுஸ்திரேலிய சிட்னி நகரில் ஆரம்பப் பாடசாலையொன்றில் 6 வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய12 வயது சிறுவர்கள்

265

அவுஸ்திரேலிய சிட்னி நகரில் ஆரம்பப் பாடசாலையொன்றில் 6 வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் இரு 12 வயது சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டள்ளனர்.

நொதர்ன் பீச்சஸ் பிராந்தியத்திலுள்ள பாடசாலையில் இடம்பெற்ற இந்த பாலியல் துஷ்பிரயோகத்தையடுத்து கைதுசெய்யப்பட்ட இரு சிறுவர்களும் இன்று சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

10 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுமி மீது மிக மோசமான முறையில் பாலியல் தாக்குதலை மேற்கொண்டதாக அந்த சிறுவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடர்பான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.school1

SHARE