அவையில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளுமாறு சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை

277
கௌரவமிக்க பாராளுமன்ற அவையில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
Karu-Jayasuriya-620x330

நேற்று சபாநாயகர் இவ்வாறு நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் ஏனையோருக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அவையில் வாய் மொழி மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேரத்தில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இருவரும் கடுமையான வார்த்தைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்தே, சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒழுக்கக் கோவை ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE