அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விபத்து மற்றும்அவசர சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நடுதளும் இரத்த வங்கி திறப்பு விழாவும்

160

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் 2000 மில்லியன் ரூபா செலவில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள அவசர விபத்துச் சேவைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழாவும், இரத்த வங்கி கட்டிட  திறப்பு விழாவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.எல்.எப்.ரகுமான் தலைமையில்  இடம்பெற்றது.

  

  

  

இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன, மற்றும்   சுகாதார  போசனை மற்றும் சுதேச வைத்திய  பிரதி அமைச்சர் பைசால் காசிம் மற்றும் பிரதி அமைச்சர்கள்    பாரளுமன்ற   உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்னவிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன்  கல்முனை மக்களின் ஆதரவுடன் தங்கப்பதக்கமும் அத்தோடு வைத்தியசாலை சார்பாக நினைவுப்பரிவில்களும் வைத்திய அத்தியட்சகரினால் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE