அஸ்கிரி பீடாதிபதியின் மறைவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்

285
கண்டி அஸ்கிரி பீடாதிபதி கலகம சிறி அத்தாதஸ்ஸி தேரரின் மறைவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

அஸ்கிரி பீடாதிபதியின் மறைவு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நிர்மலமான வாழ்க்கையை பின்பற்றிய கலகம தேரர், பௌத்த சாசனத்தை மிளிரச் செய்ய அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார்.

1936ம் ஆண்டு துறவற வாழ்க்கையை தெரிவு செய்த தேரர், எட்டு தசாப்த காலமாக பௌத்த சாசனத்தின் வளர்ச்சியாகவும் மேம்பாட்டுக்காகவும் பாரியளவில் பங்களிப்பு வழங்கியுள்ளார்.

இவ்வாறான குண நலன்களைக் கொண்ட ஓர் பௌத்த பிக்குவின் சேவை இலங்கை மக்களுக்கு கிடைத்தமை மக்கள் செய்த பாக்கியமாகும்.

உள்நாட்டு வெளிநாட்டு பக்தர்களுக்காக தேரர் அளப்பரிய சேவையை ஆற்றியுள்ளார். இனம், மதம், குலம் போன்றவற்றை கவனத்திற் கொள்ளாது அனைத்து நாட்டு மக்களுக்கும் கலகம தேரர் ஆற்றிய அரிய சேவை போற்றத்தக்கது.

கலகம தேரர் மோட்சம் கிட்ட வேண்டுமென பிரார்த்தனை செய்கின்றேன் என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

sam-860-012

SHARE