அஸ்வினை கிண்டலடித்த ஷேவாக். அஸ்வின் மனைவி என்ன சொன்னார் தெரியுமா?

181

625-500-560-350-160-300-053-800-748-160-70-8

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் 321 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டும் வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தார்.

இதனால் ஆட்டநாயகன் மற்றும் தொடர் ஆட்டநாயகன் விருதும் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. அஸ்வினுக்கு இது 7வது தொடர் ஆட்டநாயகன் விருதாகும்.

இந்நிலையில் முன்னாள் வீரர் ஷேவாக் டுவிட்டரில் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், நம்பமுடியாத 7வது ஆட்டநாயகன் விருதுக்கு வாழ்த்துக்கள் அஸ்வின். சீக்கிரமாகவே வீட்டுக்கு போய் சேருவதை திருமணம் ஆனவர்கள் மட்டுமே உணரமுடியும் என்று கிண்டலடித்தார்.

Congrats @ashwinravi99 for an incredible 7th Man of the series.
Only a married man can understand d urgency of going home early.

இதற்கு பதிலளித்த அஸ்வினின் மனைவி, நான் அந்த அளவுக்கு ஏதும் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Series win. Congratulations @imVkohli and boys.

Hello England. Welcome!

SHARE