அஸ்வின் என்னை சர்ச்சைக்குரிய விதத்தில் ஆட்டமிழக்க செய்ததும் நான் மிகுந்த ஏமாற்றமடைந்தேன்

177

அஸ்வின் சர்ச்சைக்குரிய முறைகளை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாட விரும்புகின்றாரா என நான் அவரிடம்; கேள்வி எழுப்பினேன் என ஜோஸ்பட்லர் தெரிவித்துள்ளார்

பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அஸ்வின் என்னை சர்ச்சைக்குரிய விதத்தில் ஆட்டமிழக்க செய்ததும் நான் மிகுந்த ஏமாற்றமடைந்தேன் என பட்லர் தெரிவித்துள்ளார்

கிரிக்கெட்டில் இது அடிக்கடி இடம்பெறுகின்றது ஆனால் அவ்வாறு நிகழும்போது அது ஏமாற்றத்தை அளிக்கின்றது எனவும் பட்லர் தெரிவித்துள்ளார்

துரதிஸ்டவசமாக நான் முன்னரும் அவ்வாறு ஆட்டமிழந்துள்ளேன் எதிர்காலத்தில் இது இடம்பெறாததை உறுதி செய்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அந்த தருணத்தில் அஸ்வினிடம் என்ன தெரிவித்தீர்கள் என்ற கேள்விக்கு  அஸ்வின்  அவ்வாறான பாணியில்  மன்கடிங் போன்ற முறைகளை பயன்படுததி விளையாட விரும்புகின்றாரா என நான் அவரிடம் கேட்டேன் எனவும் பட்லர் தெரிவித்துள்ளார்

அஸ்வின் இது சரியான நடவடிக்கை என நினைக்கிறாரா எனவும் நான் கேள்வி எழுப்பினேன் என பட்லர் தெரிவித்துள்ளார்

அஸ்வின் தான் செய்தது சரியென நினைக்கின்றார் அது அவரது கருத்து எனவும் பட்லர் தெரிவித்துள்ளார்

அந்த சம்பவம் அஸ்வினின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என கருத்து கூறுவதற்கு அவர் மறுத்துள்ளார்.

இங்கிலாந்து அணி இம்முறை உலக கிண்ணத்தை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக காணப்படுகின்றது எனவும் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்

இந்தியா அவுஸ்திரேலியாவும் சிறப்பாக விளையாடுகின்றன எனவும் பட்லர் தெரிவித்துள்ளார்

SHARE