இந்திய அணியின் முன்னாள் வீரர் அதிரடி ஆட்டக்காரரான சேவாக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து சமூகவலைத்தளமான டுவிட்டரில் முக்கிய பிரபலங்களை கிண்டல் அடித்து டுவிட் போடுவார்.
அதைத் தொடர்ந்து தற்போது இந்திய வீரர் அஸ்வின் குறித்து அவர் போட்ட டுவிட்டு தான் தற்போது சமூகவலைத்தளங்களை கலக்கி வருகிறது.
அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இது குறித்து சேவாக் தனது டுவிட்டரில், 7 வது முறையாக தொடர் நாயகன் விருது பெறும் சேவாக்கிற்கு தன்னுடைய வாழ்த்துக்கள் எனவும், வீட்டுக்கு செல்லும் அவசரம் திருமணமான நபருக்குத் தான் தெரியும் எனவும் கிண்டலாக தெரிவித்திருந்தார்.
சேவாக்கைப் பற்றி தெரிந்து கொண்ட அஸ்வின் இதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டார். ஆனால் அஸ்வின் மனைவியோ நான் ஒன்னும் செய்ய வில்லையே என சேவாக்கிற்கு பதில் டுவிட் போட்டிருந்தார்.
Congrats @ashwinravi99 for an incredible 7th Man of the series.
Only a married man can understand d urgency of going home early.#FamilyTime
இதற்கு சேவாக் மனைவியோ நானும் ஒன்னும் செய்யவில்லையே, இருவருக்கும் எப்போதும் அவசரம் தான் பதிவிட்டுள்ளார். சேவாக் மனைவியின் இந்த டுவிட் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
@virendersehwag lol..viru pa
@ashwinravi99 @virendersehwag hahaha I didn’t do much 🙂
@ashwinravi99 @virendersehwag hahaha I didn’t do much 🙂
.@prithinarayanan Neither did I. Both in a hurry as always@ashwinravi99 @virendersehwag