அஸ்வின் சாதனையை முறியடிக்கும் பாகிஸ்தான் வீரர்! யார் தெரியுமா?

230

625-500-560-350-160-300-053-800-748-160-70-7

இந்திய வீரர் அஸ்வினின் சாதனையை முறியடிக்க பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷாவுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.

உலக கிரிக்கெட் அரங்கில் பரம எதிரிகளாக பெரிதும் கருதப்படுவது இந்தியாவும், பாகிஸ்தானும். இதற்கு அடுத்த படியாக இங்கிலாந்தும், அவுஸ்திரேலியாவும் உள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தானும், மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல், இரவு ஆட்டமாக வரும் 21 ஆம் திகதி அபுதாபியில் நடைபெற உள்ளது.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் பாகிஸ்தான் வீரர் யாசிர்ஷாவுக்கு இது 17 வது டெஸ்ட் போட்டி ஆகும். இப்போட்டியில் யாசிர்ஷா இன்னும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினால், ஆசிய கண்டத்திலே மிகக்குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை பெறுவார்.

இதற்கு முன்னர் தற்போது இந்திய அணியில் கலக்கி வரும் அஸ்வின் 18 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தது சாதனையாக இருந்தது.

இந்நிலையில் அபுதாபியில் நடக்கும் பகல், இரவு டெஸ்ட் போட்டியில் யாசிர் ஷா மட்டும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினால் அஸ்வின் சாதனை முறியடிக்கப்படும்.

இது குறித்து பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் அஸ்வினிடம் டுவிட்டரில் கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அஸ்வின் யாசிர்ஷாவுக்கு தன்னுடைய வாழ்த்துக்கள் எனவும், இப்போட்டியை காண்பதற்கு மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE