ஆகக்குறைந்த கல்வி மட்டத்திலிருந்து மீட்டெடுக்க அனைவரும் உறுதி பூணவேண்டும் – மட்டு.அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

256

மட்டக்களப்பு மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவட்ட செயலக வாணி விழா நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர், வெறுமனே சான்றிதழ்களுக்கான கற்கையாகவே இலங்கையின் கல்வியானது அமைந்திருப்பதாக அண்மையில் நடைபெற்ற சர்வதேச மாகாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் மாற்றத்தினை ஏற்படுத்திக்கொள்ளும் போதே உலக மயமாக்கலில் உள்வாங்கப்படுவோம் என்ற கருத்து வேகமாகப் பரவிவருகிறது.

சாதாரண தரம், உயர்தரம், பல்கலைக்கழகக் கல்வியாக இருந்தாலும் நான் ஒரு சான்றிதழைப் பெற்றுக் கொள்ளவேண்டும். அரச உத்தியோகம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஒரு நோக்கத்துடன் மட்டுப்படுத்தப்பட்டவர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கல்வி என்பது ஒரு மனிதனை முழுமையடைய வைப்பதற்காக அவனுடைய சகல ஆற்றல்கள், அறிவு, மனப்பாங்கு உள்ளிட்ட அனைத்தையும் மேம்படுத்திக்கொண்டு அதன் ஊடாக இந்த சமூகத்துடன் சமூகமயமாக்கிக் கொள்வதற்கானதாக மாற்றிக்கொள்வதேயாகும்.

கல்வி என்பதே சமூக மாற்றத்துக்கான முக்கியமானதொன்று என்பது நெல்சன் மண்டேலா சுதந்திரப் போராட்டத்தின் பின் கூறிய முக்கியமானதொரு கருத்தாகும். எனவே கல்வியின் ஊடாக ஒரு சமூகத்தில் மாற்றம் ஏற்படுமாக இருந்தால் பொருளாதார மாற்றம், பொருளாதார வளர்ச்சி, தனிமனித ஆளுமை, ஆற்றல், சமூகத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு நிறைவுபெற்றவர்களாக வாழக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். வெறுமனே விழாவைக் கொண்டாடுவது மாத்திரமல்லாமல் விழாவின் நோக்கத்தினையும் உணர்ந்தவர்களாக இருந்தால் நிச்சயமாக சமூக மாற்றம் ஏற்படும்.

மட்டக்களப்பு மாவட்ட 67 வீதமான கல்வியறிவு உடைய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருக்கிறது. இது இலங்கையிலேயே மிகக் குறைந்த கல்வி அறிவு உடைய மாவட்டம் என்பதும் இதன் பொருள் எமது மாவட்டத்தில் கல்வி கல்வி அறிவு என்பதும் கல்வியைத் தொடர முடியாது என்கிற நிலையும் இருக்கின்ற பிரச்சினை. எனவே இந்த நிலையை மாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்ற திட சங்கற்ப்பம் பூணுகின்ற நாளாக இந்த நாளைப் பயன்படுத்திக்கொள்வோம்.

இன்றைய தினம் காலை நடைபெற்ற இந்த மாவட்ட செயலக வாணி விழா நிகழ்வில், பாடசாலை மாணவிகளின் நடன நிகழ்வுகளும், பஜனை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன், வருடா வருடம் நடைபெறும் கலை வாணி கல்வி உதவி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன. இதில் 15மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில். மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

unnamed-3

unnamed-4

unnamed-6

unnamed-2

unnamed

SHARE