ஆக்‌ஷன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

163
ஆக்‌ஷன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆக்‌ஷன் படத்தில் விஷால்
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ஆக்‌ஷன். துருக்கியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் விஷாலுடன் தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அயோக்யா படத்துக்கு பிறகு விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் படம் வெளியாகவுள்ளது. ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு விஷால் – சுந்தர்.சி கூட்டணியின் மூன்றாவது படம் இது.
ஆக்‌ஷன் படத்தின் போஸ்டர்தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது. இந்தப் படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நவம்பர் 15ம் தேதி ரிலீஸ் என்று விஷால் அறிவித்திருக்கிறார்.
SHARE