பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவினரால், நேற்று (வியாழக்கிழமை) கைதுசெய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சரும், மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான பசில் ராஜபக்ஷவிடம் நபர் ஒருவர் கொடுத்த பொதியினால் பசில் ராஜபக்ஷ பதற்றமடைந்துள்ளதுடன், சிறிது பரபரப்பம் ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்ஷ மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு கொண்டுச் செல்வதற்காக வாகனத்தில் ஏற்றியபோது, அங்கு குழுமியிருந்த ஒருவர் பசிலிடம் பொதியொன்றை வழங்கியுள்ளார்.
குறித்த பொதியினை வாங்கிக்கொண்ட பசில் அதனை தான் இருக்கவேண்டிய ஆசனத்தில் ஒதுக்குபுறமாக வைத்ததுடன், அதனைய சிலநிமிடங்கள் வியப்புடன் பார்த்துகொண்டிருந்தார். அது என்னவென்றும் அவருக்கு தெரியவில்லை.
எனினும், பொதியை வழங்கியவர், பசில் ராஜபக்ஷவின் தீவிர ஆதரவாளர் என்றும், சிறுபண்டங்கள் அடங்கிய உணவு பொதியையே அவர் வழங்கியதாகவும் அங்கு குழுமியிருந்தவர்கள் தெரிவித்தனர்.