ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ராமன் மக்சாசே விருது 82 வயதுடைய இலங்கைத் தமிழ்ப் பெண் சமூக செயற்பாட்டாளரான கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக பிலிப்பைன்ஸில் வைத்து வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெமோன் மெக்செசே என்பவர் 1957 காலப்பகுதியில் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாக பணியாற்றினார். இந்த நிலையில் அவரின் நினைவாகவே ரெமோன் மெக்செசே விருது வழங்கப்பட்டு வருகின்றது.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அவர் இந்த பணிகளை புரிந்தமைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகின்றது.
இதேவேளை, இதற்கு முன்னர் இலங்கையில் பண்டிதர் அமரதேவ் போன்ற ஆறு இலங்கையர்கள் இந்த விருதை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.