குளவி கொட்டுக்கு இழக்காகிய பாடசாலை மாணவர்கள் 20 பேர் உட்பட ஆசிரியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோர்வூட் எல்பட தமிழ் வித்தியாலய மாணவர் மாணவிகளே இவ்வாறு 22.09.2016 காலை குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர்.
எல்பட வித்தியாலயத்திற்கு அறுகில் மரமொன்றிலிருந்த குளவி கூடு கலைந்தே பாடசாலைக்கு வந்த மாணவர்களை கொட்டியுள்ளதாகவும் தரம் 8,9 வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்கள் 9 பேருடன் 11 மாணவிகளுமாக 20 பேர் உட்பட ஆசிரியை ஒருவருமாக 21 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மாலையே குறித்த மரத்தில் குளவிகள் கூடு கட்டிய நிலையில் குளவிக்கொட்டு சம்பவித்துள்ளதாக வித்தியலய அதிபர் மைக்கல்ராஜ் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களை பொகவந்தலா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.