சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் பிடிக்கின்றது. ஏனெனில் எல்லோரிடத்திலும் மிகவும் மரியாதையாகவும், எளிமையாகவும் நடந்துக்கொள்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் அஜித்துடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும், அது தான் என் விருப்பம் என்று கூறினார்.
அவரை சந்தித்த போது கூட எடுக்க முடியவில்லை என வருத்தப்பட்டார். தற்போது சில தினங்களுக்கு முன் அஜித்தை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து, தன் டுவிட்டர் பக்கத்தில் மிகவும் சந்தோஷமாக அதை பகிர்ந்துள்ளார்.