
தற்போது, மனித மூளையில் உருவாக்கப்படும் அலைகளை உணர்ந்து செயற்படக்கூடிய ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதன்மூலம் இருந்த இடத்திலிருந்தே தமது எண்ணங்களால் ரோபோக்களுக்கு மனிதர்கள் கட்டளை இட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை எம்ஐடி பல்கலைக்கழகத்தின் கணிப்பொறி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூட ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். அதேபோல் மனிதர்களிடம் கேள்வி கேட்க கூடிய புதிய வகை ‘ரோபோ’ க்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபடும் ‘ரோபோ’ குழப்பமான சூழ்நிலையில் தனது சந்தேகங்களை புத்திசாலி தனமாக கேள்விகளாக கேட் கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.