ஆடவர் 200 மீ. ஃப்ரீஸ்டைல்: சீனாவுக்கு தங்கம்

258

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 200 மீ. ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் சீனாவின் சன் யாங் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 200 மீ. ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்றில் தென் ஆப்பிரிக்காவின் லீ கிளாஸ், யாங்குக்கு கடும் சவால் அளித்தார். 150 மீ. தூரம் வரை கிளாஸ் முன்னிலையில் இருந்த நிலையில், கடைசி 50 மீ. தூரத்தில் அபாரமாக செயல்பட்ட யாங் 1 நிமிடம், 44.65 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.

லீ கிளாஸ் 1 நிமிடம், 45.20 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளியையும், அமெரிக்காவின் கானர் டையர் 1 நிமிடம், 45.23 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலத்தையும் தட்டிச் சென்றனர். ஒலிம்பிக் போட்டியில் யாங் வென்ற 3-ஆவது தங்கப் பதக்கம் இதுவாகும். முன்னதாக லண்டன் ஒலிம்பிக்கில் 400 மீ, 1,500 மீ. ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டிகளில் யாங் வென்றுள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் 3 ஃப்ரீஸ்டைல் போட்டிகளில் வென்ற முதல் வீரர் என்ற பெருமை யாங் வசமாகியுள்ளது.

SHARE