ஆடி அமாவசைத் தீர்த்தம்-முல்லைத்தீவு

345

ஆடி அமாவசைத் தீர்த்தம் வெகு சிறப்பாக முல்லைத்தீவு கெருடமடு பிள்ளையார்

கோவிலில் இடம்பெற்றுள்ளது.0b5f0667-67ed-4136-89df-01a0e8748ccb 016c3c78-246c-450c-a749-195581fa1404 aacb62ae-73ee-4835-a788-b14eb43cae30 ca86b33a-1621-4151-871d-5acdbf2e46ac ec3d8177-0ac8-45c5-8d7f-1f8b3b0e5a7a

ஓட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர் ஆலயத்திலிருந்து சிவபெருமான் வீதீ வழியாக

கெருடமடுவைச் சென்றதும் எம்பெருமானுக்கு ஆலய பிரதமக்குருக்கள்

கீர்த்திஸ்ரீவாசன்குருக்கள் அவர்களினாலும் கெருடமடு பூசகர் சி.சிவஞ்ஞானம்

அவர்களினாலும் பூசைகள் இடம் பெற்று தந்தையை இழந்தபிள்ளைகள் தங்கள் தந்தையின்

ஆத்மா சாந்தியடைவதற்கு விதரமிருந்து கிரியைகள் செய்யப்பட்டு நீரில் கரைத்து

தீர்தமாடுவது இந்துக்களின் ஒரு முக்கியமான விரதமாகும்.

அந்த வகையில் 600 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்ததும் கெருடன் என்ற பறவையினால்

சிவபெருமானின் அருளால் கீரிமலைக்குச் செல்லும் முதியவர்களால் நடக்கமுடியாத

நிலை ஏற்பட்டபோது இவ்விடத்தில் இப்பறவை வந்து தன்னுடைய சொண்டால் கீறி நீரை

எடுத்து அடியார்களினை தீர்த்தமாட வைத்ததனால் கெருடன் மடு என்ற காரணப் பெயரும்

இவ் இடத்திற்கு உண்டு.

அந்த வகையில் பல்வேறுபட்ட மாவட்டங்களிலிருந்து தங்கள் நேர்த்திக் கிரியைகளை

செய்வதற்கு பெருந்திரளான மக்கள் வருகை தந்து தீர்த்தமாடுவது வழக்கம். இந்த ஆண்டும்

பெருந்திரளான மக்கள் கிரியைகள் செய்து தீர்த்தமாடியமை குறிப்பிடத்தக்கது.

SHARE