ஆட்கடத்தலுக்கு உதவும் அதிகாரிகளை தண்டியுங்கள்-அமெரிக்கா

198

வெளிநாடுகளிற்கு ஆட்களை சட்டவிரோதமாக கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

சர்வதேசரீதியில் ஆள்கடத்தல் குறித்த அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ  இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஆட்களை வெளிநாடுகளிற்கு சட்டவிரோதமாக கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து விசாரணை செய்து அவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை தீவிரப்படுத்தவேண்டும் என அமெரிக்கா தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உட்பட அனைவரையும் விசாரணை செய்து அவர்களிற்கு ஏனைய பாரதூரமான குற்றங்களிற்கு வழங்கும் தண்டனையை வழங்கவேண்டும் எனவும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடத்தப்படும் நபர்களை கண்டுபிடிக்கும் திறனை இலங்கை அதிகரிக்கவேண்டும், அதிகாரிகளிற்கு இந்த விடயத்தில் பயிற்சி அளிக்கவேண்டும் எனவும் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ள அமெரிக்கா ஆள்கடத்தல் காரணமாக நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை தடுத்துவைத்தல் உட்பட ஏனைய தண்டனைகளை இலங்கை வழங்ககூடாது எனவும்  கோரிக்கை விடுத்துள்ளது.

SHARE