அதனைத் தொடர்ந்து நாடாளாவிய ரீதியில் விகாரைகளில் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டதோடு அவரோடு குடும்பத்தினரும் இணைந்துகொண்டனர்.
அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளாத மஹிந்த குடும்பத்தினர் அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் திருமண நிகழ்வுகளுக்கு செல்ல ஆரம்பித்தனர்.
அந்த நிகழ்வுகளில் மணமகளுக்கோ அல்லது மணமகளுக்கோ சாட்சியாளராக கையொப்பமிட ஆரம்பித்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது புதல்வர் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் அவருடன் அடிக்கடி இணைந்துகொண்டார்.
இந்த நிலையில் எம்.சி பிலிப்பின் திருமண நிகழ்வில் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று கலந்துகொண்டதோடு திருமணத்திற்கு சாட்சியாளராகவும் கையொப்பமிட்டுள்ளார்.
இதேவேளை லுனுகம்வெஹர பிரதேச சபை உறுப்பினர் ரசிக தினேஷின் திருமண நிகழ்வு இன்று எம்பிலிபிட்டியவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஸ கலந்துகொண்டுள்ளார்