ஆட்டத்தை நன்றாக முடித்துள்ளோம்:டோனி

321

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டோனியின் சிறப்பான ஆட்டத்தில் புனே அணி வெற்றி பெற்றது.

இது குறித்து டோனி கூறியதாவது, இது ஒரு அருமையான ஆட்டம். நாங்கள் தகுதி பெறும் நிலையில் இருந்திருந்தால் இப்படிப்பட்ட வெற்றியுடன் தான் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றிருப்போம்.

திரும்பிப் பார்க்கையில், நாங்கள் நன்றாகத் தொடங்கினோம், நன்றாக முடித்துள்ளோம், நாங்கள் முழுவதுமாக தோற்கடிக்கப்படவில்லை. இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

தொடக்கத்திலிருந்தே பந்துவீச்சு பற்றியே எங்கள் கவலை இருந்து வந்தது. புதிய பந்தில் நன்றாக வீசும் போது ஸ்பின்னர்களும் நன்றாக வீசினர். இல்லையெனில் பவுலர்கள் திண்டாடினர் என்றே கூற வேண்டும்.

மொத்தத்தில் சில நல்ல திறமையின் அம்சங்கள் வெளிப்பட்டன. மிகச்சிறந்த வீரர்கள் எங்கள் கைவசம் இல்லை. ஆனாலும் இது ஒரு நல்ல டீம்.

எங்கள் தேவைக்கேற்ப நாங்கள் எப்படி ஆட்டத்தை மாற்றிக் கொண்டோம் என்பது முக்கியம் என கூறியுள்ளார்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

SHARE