ஆட்டோ டிரைவர்களை அடித்து நொறுக்கிய சூர்யா பட வில்லன்

184

ஆட்டோ டிரைவர்களை தாக்கியது தொடர்பாக நடிகர் ஆகாஷ்தீப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வருபவர் ஆகாஷ்தீப் சைகல். இவர் டிவி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். சூர்யாவின் அயன், விஜய் சேதுபதியின் கவண் படங்களில் இவர் நடித்துள்ளார்

மும்பையில் வசித்து வரும் இவர் டிராபிக்கால் தொல்லையாக இருப்பதால் ஒன்வே ஆக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ஒன்வே ஆக்க போக்குவரத்து போலீசார் டிவைடர் வைத்தனர். ஆனால் ஆட்டோ டிரைவர்கள் அந்த பாதைய பயன்படுத்து மீண்டும் டூ வேவாக மாற்றினர்.

இதையடுத்து 2 ஆட்டோ டிரைவர்களுக்கும், சைகலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் சைகல் 2 ஆட்டோ டிரைவர்களை தாக்கியுள்ளார்.

 அதில் ஒரு ஆட்டோ டிரைவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சைகலை விசாரணைக்கு வரும்படி உத்தரவிட்டுள்ளனர்
SHARE