நகைகள் என்றாலே அது பெண்களுக்கு தான் பொருந்தும். பெண்கள் என்னதான் அளவுக்கதிகமாக தங்க நகைகள் அணிந்தால், அது ரசிக்கும் விதமாக இருக்கும்.
ஆனால், ஆண்களுக்கு அப்படியல்ல. அளவுக்கதிமான நகைகள் அவர்களின் அழகை கெடுக்கும்விதமாக இருக்கும்.
பொதுவாக, தங்கநகைகளை விட வெள்ளி மற்றும் பிளாட்டின நகைகள் ஆண்களின் அழகினை சற்று மெருகேற்றும்.
உறுதியான ஆண்களின் உபயோகத்திற்கு ஏற்ற உறுதியானது பிளாட்டினம்.
ஆண்கள் அணிகின்ற பிளாட்டின செயின்கள் என்பது நெருக்கமான இறுக்கிய அமைப்புகள் இல்லாமல் ஹாலோ வடிவமைப்புடன் உள்ளன. ஹாலோ டைப் செயின்கள் மெல்லிய தட்டை அமைப்பு மற்றும் உருண்ட கனமான அமைப்பு கொண்டவாறும் உள்ளன.
இதுபோன்ற பிளாட்டின நகைகள் அவர்களுக்கு சிறந்த தெரிவு. கம்பி போன்ற நீள்செவ்வகம் மற்றும் உருவளை வடிவ மூடிய அமைப்புடன் கூடிய செயின்களும் ஆண்களும் ஏற்றதாக உள்ளது. பக்ள்ஸ் டைப் இணைப்பு கொண்ட செயின்களும் மிக விருப்பமான செயின்களாக உள்ளன.
தங்கள் கரங்களுக்கு ஏற்றவாறு ஆண்கள் பிரேஸ்லெட் அணியவேண்டும். கொஞ்சம் திடமான கைகளாக இருந்தால், வாட்ச் ஸ்ட்ராப் போன்ற இணைப்புகள் கூடிய பளபளப்பு மற்றும் மேட் பினிஷ் பிரேஸ்லெட்கள் அணியலாம்.
மெல்லிய கைகளுக்கு, கயிறு மற்றும் கம்பி இணைப்புகள் கொண்டவாறு பிரேஸ்லெட்கள் வருகின்றன. ஒற்றையாய் உருளை வடிவ கயிறு போன்ற பிரேஸ்லெட் முதல் பல பின்னல் கயிறு அமைப்புடன் பிரேஸ்லெட் வருகின்றன. அதுபோல் சிறுசிறு வளையங்கள் இணைந்தவாறு நடுவில் பெயர் பட்டை (அ) தட்டையான அமைப்பு கொண்டவாறும் பிரேஸ்லெட் வருகின்றன.
இந்த வகை பிரேஸ்லெட்கள் எல்லாம் மெல்லிய வகையான நகைகளாக உள்ளன. வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த பிளாட்டின நகைகள் அனைத்தும் ஆண்களின் அழகினை இன்னும் சற்று மெருகேற்றுகின்றன.