ஆண்களுக்கு பதில் ரோபோ: இப்போ இதுலயும் பங்குக்கு வந்துருச்சா??

311

 

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அடுத்த 10 ஆண்டுக்குள் அதிநவீன செக்ஸ் ரோபோக்களுடன் வெளிப்படையாகவே காதல் கொள்ளும் நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பியர்சன், செக்ஸின் எதிர்காலம் குறித்து வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், தற்போது சர்வசாதாரணமாக பெண்கள் ஆபாசப் படம் பார்ப்பது போல் எதிர்காலத்தில் ரோபோக்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் நிலை உருவாகும் என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘ஆணுடனான செக்ஸை விட ரோபோக்களுடன் செக்ஸ் கொள்ளும் ‘ரோபோபிலியா’ வருகிற 2050ஆம் ஆண்டுக்குள் முழுவீச்சில் பிரபலமாகும் என கூறியுள்ளார். இது தொடர்பாக பியர்சன் வெளியிட்ட அறிக்கையில், நிறைய பேர் ரோபோக்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முன்பதிவு செய்து வருகின்றனர்.

மனிதர்கள் படிப்படியாக ரோபோக்களின் செயற்கை நுண்ணறிவு, இயந்திர செயல்பாடுகள், மற்றும் அதனுடனான உணர்சிகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் முதலில் நண்பர்களாக்கிக் கொண்டு, பின்னர் உணர்சிகளை வலுவாக்கி அதனுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
செக்ஸ் தேவையை எல்லா வகையிலும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ரோபோக்கள் செயல்படும். பயன்பாட்டுக்கு பிறகு முழுவதுமாக ஸ்டெரிலைஸ் செய்யப்படும் என்பதால் எய்ட்ஸ், எச்ஐவி பரவும் அபாயம் முழுவதுமாக தவிர்க்கப்படும்.

SHARE