ஆண்களை போல் நடத்தப்பட்டேன்: ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக குர்திஷ் படையில் பணியாற்றிய முன்னாள் மொடல் (வீடியோ இணைப்பு)
373
[
கனடாவை சேர்ந்த முன்னாள் மொடல் ஒருவர் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக குர்திஷ் படையில் இணைந்து தான் பணியாற்றிய போது மிகவும் கண்ணியமாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கனடாவை சேர்ந்த முன்னாள் மொடல் டைகர் சுன் (Tiger sun 46). இவர் கடந்த மார்ச் மாதம் கனடாவில் இருந்து சிரியாவுக்கு சென்றார்.
பின்னர் குர்திஷ் ஒய்.பி.ஜெ படையில் இணைந்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக பணிபுரிந்துவந்தார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக அதிக எடையுள்ள பொருட்களை தனது உடலில் கட்டியிருந்ததாலும் ஊட்டச்சத்து குறைபாடினாலும் அவரது கால்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து அவர் தனது சொந்த நாட்டுக்கே திரும்பினார். இந்நிலையில் குர்திஷ் படையில் பணிபுரிந்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து அவர் கூறியதாவது, நான் முன்னாள் மொடல் என்பதால் எனக்கு அங்கு நல்ல மரியாதை தரப்பட்டது.
குர்திஷ் படையில் மருத்துவ வசதி சிறப்பாக இல்லை. குண்டுவெடிப்பில் காயமடைந்த ஒரு சிறுமி மருத்துவ வசதி இல்லாமல் இறந்ததை நேரிடையாக பார்த்தேன். மேலும் போரின் போது எனது நண்பர்களின் இறந்த உடல்களை பார்க்கும் போது வருத்தமாக இருக்கும்.
பின்னர் அதை போரின் போது நிகழும் ஒரு சாதாரணமான விடயமாக எடுத்துகொண்டேன்.
குர்திஷ் படையில் எனக்கு எந்த விதமான பாலியல் தொல்லைகளும் ஏற்படவில்லை. என்னை ஒரு சக ஆண் வீரரை போன்று நடத்தினார்கள் என்று கூறியுள்ளார்.