ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதி ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் 65ம் ஆண்டு நிறைவு நிகழ்வு, குருணாகலில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுதந்திரக் கட்சியின் அழைப்பினை ஏற்று நிகழ்வில் பங்கேற்பதா இல்லையா என்பது இன்னமும் தீர்மானிக்கவில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் நிகழ்வில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.
நான் இலங்கையில் இருந்தால் நிகழ்வில் பங்கேற்பதாக மஹிந்த ராஜபக்ச கூறினார் என வெளியான தகவல்களில் உண்மையில்லை.
நாட்டில் இருந்தால் நிகழ்வில் பங்கேற்பதாக தாம் அமைச்சர் ஜோன் செனவிரட்ன அல்லது வேறும் ஒருவரிடம் நான் கூறவில்லை என மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.