ஆத்திரம் தீராத இங்கிலாந்து வீரர்கள்! ரகளையில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள்!

240

625-500-560-350-160-300-053-800-748-160-70-9

இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது போட்டி முடிந்தும் ரகளையில் ஈடுபட்ட இங்கிலாந்து மற்றும் வங்கதேச வீரர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியும் வென்றது.

இத்தொடரின் இரண்டாவது போட்டியின் போது இங்கிலாந்து வீரர் பட்லர் டிஆர்எஸ் முறையில் அவுட்டாகி வெளியேறினார்.

ஆனால் வங்கதேச வீரர்களோ இங்கிலாந்து வீரர் பட்லரை கிண்டல் செய்து வெளியில் போகும் படி ஆக்ரோசமாக கூறினர். இதனால் வங்கதேச வீரர்களுக்கும், பட்லருக்கும் கடுமையான வாக்குவாதமே நடைபெற்றது.

இதனால் பட்லர் கோபமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். இப்போட்டி முடிந்து இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் நட்பு முறையில் கைகுலுக்கி சென்று கொண்டிருந்த போது, இங்கிலாந்து வீரர் பென் ஸ்டொக்ஸ் , வங்கதேச வீரர் தமீம் இக்பாலை கையை பிடித்து உதறினார். இருவரும் சண்டை போடும் அளவிற்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இடையில் வந்த வங்கதேச வீர சகிப் அல் ஹசன் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். ஆனால் இதைக் கண்ட இங்கிலாந்து அணியின் தலைவர் பட்லரோ ஆத்திரம் தீராதது போல் மைதானத்தை சுற்றியே கோபமாக வலம் வந்தார்.

இதன் காரணமாக இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் அனல் பறக்கும் எனபதில் மாற்று கருத்து இல்லை.

SHARE