அஜித் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த என்னை அறிந்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் தற்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டு ’எந்த வாடு கானி’என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
இதுவரை வேறு எந்த அஜித் படத்திற்கும் இல்லாத அளவிற்கு ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் என்னை அறிந்தால் ரிலிஸாகியுள்ளது. இன்று காலை காட்சி பல மல்டிப்ளக்ஷ் தியேட்டர்களின் படம் ஹவுஸ்புல் தான்.
படம் ரசிகர்களை திருப்தி படுத்தியதா என்றால், டுவிட்டரில் வரும் கருத்துக்களை வைத்து பார்க்கையில் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தியுள்ளதாம். மேலும், படத்தில் பர்ஸ்ட் ஆப் எதிர்ப்பார்த்தது போலவே கொஞ்சம் நெகட்டிவ் கமெண்டுகளாக வர, இரண்டாம் பாதி அஜித்+அருண் விஜய் காம்பினேஷன் காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகின்றது.
எந்த வாடு கானி கண்டிப்பாக ஒரு ஹிட் படம் தான் என ஆந்திரா மீடியாக்கள் சில தெரிவித்துள்ளது.