ஆனந்தசுதாகரனின் விடுதலை தொடர்பாக யாழ் இந்திய துணைத் தூதுவரிடம் மனு கையளிப்பு…!

196

 

யாழ் இந்திய துணைத் தூதுவரிடம் மனு கையளிப்பு…!

யாழ் இந்திய துணைத் தூதுவர் திரு.எஸ்.பாலச்சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து ஆனந்தசுதாகரனின் விடுதலை தொடர்பாக 22.06.2018 அன்று வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் கலந்துரையாடினார். இச்சந்தி;பபில் கல்வி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் நடராஜா அனந்தராஜ் மற்றும் இந்தியத் துணைத்தூதரக அதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தாயை இழந்தும்,தந்தையைச் சிறையில் அடைக்கப்பட்டதாலும் அனாதரவாக்கப்பட்டு, வயதான பேத்தியாருடன்; வாழும்,இரு சிறுவர்களின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பும் மற்றும் இரு சிறார்களின் மன உலச்சல் எதிர் காலத்தில் பாதிக்காத வகையில் அரசியல் கைதியான இஆனந்தசுதாகரனை ஜனாதிபதியின் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படவேண்டுமென வடக்குக் கிழக்கு,தெற்கு,மேற்கு என இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மற்றும் சமுக,அரசியல் அமைப்புக்கள் ஏராளமான கையெழுத்து;ப போராட்டங்களை நடாத்தியிருந்தன. அதனத் தொடர்ந்து ஆனந்தசுதாகரன் .கடந்த தமிழ்,சிங்கள புத்தாண்டளவில் விடுவிக்கப்படுவார் என்ற செய்தியும் ஜனாதிபதியிடம் இருந்து வெளிவந்தது.
எனினும் அவரது விடுதலையை உத்தரவாதப்படுத்த பிள்ளைகளை நினைத்து தினமும் சிறையில் தவித்துக் கொண்டிருக்கும் ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக் கோரி இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மற்றும் வடமாகாணக் கல்வி அமைச்சின் அனுசரணை யுடன்,வடமாகாண கல்விச் சமூகமாகிய கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் இருந்து 3 லட்சம் கையெழுத்துக்கள் மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களால் பெறப்பட்டு நேரடியாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்
பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து 22.06.2018 அன்று 3 லட்சம் கையெழுத்துக்கள் மாகாணக் கல்வி அமைச்சரினதும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினரதும் கோரிக்கைக் கடிதங்களுடன் கூடிய மனு யாழ் இந்திய துணைத் தூதுவரிடம் கையளித்து தற்போது தடுப்பில் உள்ள ஆனந்தசுதாகர் ஆயுதபயிற்சி பெற்ற ஒருவர் அல்லாது ஒரு அரசியல் கைதியாகவே இருப்பதால் அவரது குழந்தைகள் அநாதையாக்கப்படாது இருப்பதற் காக, இந்திய அரசு அவரது விடுதலையில் கவனம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ் விடயத்தினை இலங்கையில் உள்ள இந்திய தூது வரின் ஊடாக பாரதப் பிரதமரிடம் தெரியப்படுத்தி இலங்கை அரசிடம் சிறுவர்களின் எதிர்காலத்தையும் நலனையும் கருத்தில் கொண்டு இவ்விடயம் பற்றி கவனம் எடுப்பதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் திரு.எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

SHARE