ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளின் கல்வி செலவுகளை ஏற்றுக்கொள்வதாக நவோதய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே, நவோதய மக்கள் முன்னணியின் தலைவர் எஸ்.கே.கிருஷ்ணா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
சுதாகரனின் விடுதலைக்காக தேவையான நடவடிக்கைளை மேற்கொள்வோம். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்யவந்தவருக்கே பொதுமன்னிப்பு வழங்கியிருக்கின்றார்.
அதனால் ஜனாதிபதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பார்.
ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக போராட முன்வந்துள்ள நவோதய மக்கள் முன்னணி இதில் ஒருபோதும் அரசியல் செய்யாது என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளுக்கும் பண உதவி உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.