இந்த நாட்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மலைநாட்டுப் பிரதேசங்களுக்கு படையெடுத்து வரும் நிலையில், குறித்த சுற்றுலாப் பயணிகளால் அழகிய இயற்கை சுற்றுச்சூழல் அழிவை எதிர்நோக்கி வருகின்றமை அனைவரையும் கவலையடைய வைத்துள்ளது.
இந்த வகையில் ஹப்புத்தளையில் அமைந்துள்ள எடிசம் பங்களா மிகவும் முக்கியமான ஒரு சுற்றுலா மையமாகும்.
இந்த எடிசம் பங்களாவினை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் குறித்த சுற்றுச் சூழலில் குப்பைகளை எறிவதோடு மட்டுமல்லாது, நீர் நிலைகளில் மதுபான போத்தல்களையும் வீசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீரும் அசுத்தமடைவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே சுற்றுலாத் தளங்களின் அழகை நாம் மட்டும் கண்டுகளிக்காமல் அதன் பயனை எதிர்கால சந்ததியினரும் அனுபவிக்கும் வகையில் பயன்படுத்துமாறு சுற்றுச்சூழல் அபிமானிகளால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.