டுவிட்டர் பக்கத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் நடிகர் அமிதாப் பச்சனை பின்தொடர்ந்து வருகின்றனர்.
தன்னுடைய பேஸ்புக், டுவிட்டர் என எல்லா சமூக வலைதளங்களிலும் அமிதாப் ரசிகர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அமிதாப் டுவிட்டரை சைபர் கிரைம் குற்றவாளிகள் முடக்கி அதில் ஆபாச வீடியோவை பரவவிட்டுள்ளனர்.
புகார் கொடுத்த பிறகு அமிதாப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், எனது டுவிட்டரை சிலர் கைப்பற்றி முடக்கி அதில் ஆபாச இணையதளங்களை பரவ விட்டனர். யார் இதை செய்தார்கள் என்று தெரியவில்லை.
சிலர் முயற்சி செய்து இருக்கிறார்கள், நண்பா எனக்கு இது தேவையில்லாதது என்று கூறியிருக்கிறார்.