
கூகுளில் ஒருவர் தேடிய ப்ரவுசிங் ஹிஸ்டரியை அழித்து ஓய்ந்துபோகும் நிலையை மாற்றவும் டேடா,பாஸ்வேர்டுகள் சேமிக்காமல் வசதியாக ப்ரவுஸ் செய்யும் வகையில் கூகுள் குரோம் ப்ரௌசரில் உருவாக்கிய அம்சம் தான் ‘இன்காக்னிட்டோ’.
ஆனால் இவற்றை வைத்து, ஆபாச வலைதளங்களை தேடும் வழக்கமே பலரிடம் உள்ளது. அத்தகைய பயனாளிகளுக்கு கூகுள் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
இக்காலகட்டத்தில் ஆபாசம் என்றாலே இணையதளம் என்றாகிவிட்டது.
பார்ன், செக்ஸ், ஆபாசம் என்ற வார்த்தைகள் எவ்வளவு முறை கூகுளில் தேடப்பட்டன என்பது முதற்கொண்டு துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். இன்காக்னிட்டோவை பலரும் ஆபாச வலைதளங்கள் பார்க்கவே பயன்படுத்தி வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அதிகளவில் ஆபாச வலைதளங்களை இன்காக்னிட்டோவில் தேடும் நபருக்கு கூகுள் ஒரு குறுஞ்செய்தியைக் கொண்ட குறியீடைக் காட்டும்.

இந்நிலையில், ஒரு நபர் இன்காக்னிட்டோ ப்ரவுஸரில் 100 விண்டோக்களை திறக்கும்போது, டேப் எண் காட்டும் இடத்தில் கண் சிமிட்டி சிரிப்பதுபோன்ற ஸ்மைலி ஒன்று காட்டும்.ஆண்ட்ராய்டு போன்களில் இந்த ஸ்மைலி கண்ணடித்து சிரிப்பதுபோல இருக்கும். ஐஓஎஸ் என்றால் ஸ்மைலி சாதாரணமாக இருக்கும்.
இன்காக்னிட்டோவில் மறைமுக தேடலுக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை உணர்த்தவே இந்த கண்ணடிக்கும் ஸ்மைலி தோன்றுவதாக தெரிகிறது.