ஆப்கானிஸ்தானில் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கி எரித்துக்கொன்ற வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

376
ஆப்கானிஸ்தானில் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கி எரித்துக்கொன்ற வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்(Kabul) உள்ள மசூதியின் அருகே பார்குந்தா(Farkhunda Age-27) என்ற இளம்பெண்ணை, அப்பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று, கல் மற்றும் கம்பால் அடித்து தாக்கியுள்ளது.

அதன்பின்னர் அக்கும்பல் அவரது உடலை அருகில் இருந்த ஆற்றுக்கு எடுத்து சென்று தீயிட்டு எரித்துள்ளது. பின்னர் கருகிய உடலை ஆற்றின் சகதியில் போட்டுள்ளனர்.

புனித நூலான குரானை தீயில் போட்டு எரித்ததால் அப்பெண்ணை எரித்துக்கொண்டோம் என அக்கும்பல் கூறியது.

இச்சம்பவம் தொடர்பாக 49 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணையின் முடிவில் வெளிவந்துள்ள நீதிமன்ற தீர்ப்பின்படி 4 பேருக்கு மரண தண்டனையும், 8 பேருக்கு 16 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 18 பேரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. மீதமிருக்கும் 19 காவல்துறையினரின் நிலை என்ன? என்பது தெரியவில்லை.

இவர்கள் அனைவரும் குற்றத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பு குறித்து அப்பெண்ணின் தந்தை கூறியதாவது,100 பேருக்கும் மேற்பட்டோர் எனது மகளை அடித்துக்கொன்றனர், ஆனால் 4 பேருக்கு மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இன்னும், உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என கூறியுள்ளார்.

SHARE