ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

170
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. #INDvsAFG
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை ஐ.சி.சி. வழங்கியது. ஆப்கானிஸ்தான் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை இந்தியாவுடன் தொடங்க விருப்பம் தெரிவித்தது. அதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் சம்மதம் தெரிவித்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி, இந்தியாவுடன் மோதும் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் அணிகளின் பட்டியலில் 12-வது அணியாக ஆப்கானிஸ்தான் இணைந்தது.
‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து  முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியில்,
தவான் (107 ரன்கள்), முரளி விஜய் (105 ரன்கள்), ராகுல் (54 ரன், 64 பந்து, 8 பவுண்டரி) சிறப்பான பங்களிப்பை அளித்து பெவிலியன் திரும்பினார்.
இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்து இருந்தது.  அஷ்வின் மற்றும் ஹர்திக் பாண்ட்யா களத்தில் இருந்தனர்.
2-வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும், அஷ்வின் 18 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 20 ரன்களில் நடையை கட்டினார். மறுபுறம் பாண்ட்யா அதிரடி ஆட்டம் ஆடினார். அபாரமாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா 71 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி 104.5 ஓவர்களில் 474 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில்  ஆட்டமிழந்தது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய உள்ளது.
SHARE